சுகாதார பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்ல மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவை - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

சுகாதார பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்ல மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவை

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் சுகாதாரப் பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தப் போக்குவரத்து சேவை தேவைப்படும் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை www.ntc.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஒன்லைன் முறையின் ஊடாக staffservice@ntc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 011 2503725 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். 

1955 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad