பல வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஒரேயடியாக - விரைவாக பணிகளை ஆரம்பிக்க துறை முன்னோடிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

பல வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஒரேயடியாக - விரைவாக பணிகளை ஆரம்பிக்க துறை முன்னோடிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக குறைந்த, மத்தியதர மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோருக்காக பல வீடமைப்பு திட்டங்களை ஒரேயடியாக ஆரம்பிக்குமாறு நிர்மாணத்துறை முன்னோடிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பம் மற்றும் முறைமைகளை பயன்படுத்தி ஆக்கத்திறனுடனும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையிலும் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நிர்மாணத் துறையில் உள்ள 10 நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று வருடங்களில் மத்திய வகுப்பினருக்காக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 15000 ஆகும். குறைந்த மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோரினதும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் நான்கு வருடங்களில் 36884 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. 

பேலியகொட, கொலன்னாவ, புளுமெண்டல், கொட்டாவ-மாகும்புர, கொட்டாவ-பலதுருவத்த, பொரலஸ்கமுவ, மாலபே, கண்டி- கெட்டம்பே மற்றும் அநுராதபுரம் நகரங்களை மையப்படுத்தி முதற்கட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நிர்மாணத் துறையில் உள்ள உள்நாட்டு தொழிற்துறையினருக்கு அதில் இணைந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும். நிறைவேற்று, தொழில் முயற்சி மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள பெருமளவு இளைஞர்களின் வீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அதற்காக 30 வருடங்களில் செலுத்தி முடிக்கக்கூடிய வகையில் இலகு வட்டி வீதத்தில் கடன் வழங்க வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் பல தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கொவிட் நோய்த் தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளையும் அதிகபட்சமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைத்து தொழிற்பிரதேசங்களும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சக்தியாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிர்மாணத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad