வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன் - வீடியோ - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 3, 2020

வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன் - வீடியோ

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். 

வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும். மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

வீடியோ ஸ்பானிஷ் மொழியில் உள்ளது. இருந்தாலும் கூட அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைப்பதை மறுக்க முடியவில்லை. இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் (மனைவி) அழகான பிங்க் நிற உடையில் முன் தள்ளிய வயிற்றுடன் அமர்ந்திருக்கிறார். சுற்றிலும் விருந்தினர்கள் அமர்ந்திருக்க, கையில் மைக்குடன் கணவன் எழ, மக்கள் கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.

புன்னகையுடன் எழும் அவர், தன் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவரைக் காட்டி இது எனது வக்கீல். எங்களிடம் ஒரு ஆவணம் உள்ளது அதை உங்களுக்கு காட்ட விரும்புகிறோம் என்று கூற, அந்த வக்கீல் அந்த ஆவணத்தை எடுத்து அந்த கணவனிடம் கொடுக்கிறார்.

அதை கையில் எடுத்து விருந்தினர்களிடம் காட்டும் அந்த கணவன், உங்களுக்கெல்லாம் நான் அப்பாவாகப் போகிறேன் என்பது தெரியும். எனக்கு ஆண் குழந்தை பிறக்க இருக்கிறதும் எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் என் மனைவி நான்கு மாத கர்ப்பம் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், அது உண்மையில்லை. அவர் ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறார். இதோ அவள் கர்ப்பமுற்றதை உறுதி செய்யும் பரிசோதனையின் முடிவு என அவர் அந்த ஆவணத்தைக் காட்ட அவரது மனைவியின் முகம் மாறுகிறது.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, அவரது மனைவி இங்கே வேண்டாம் நாம் தனியாக இது குறித்து பேசிக் கொள்ளலாம் என கணவரிடம் கெஞ்சுகிறார். மனைவி கெஞ்சுவதை பெரிது படுத்தாமல், அதற்குள் அவரது வக்கீல் லப்டெப்பை திறந்து, அதிலுள்ள ஒரு வீடியோவை விருந்தினர்களுக்கு காட்டுகிறார். அந்த வீடியோவில் வெறும் டவல் மட்டும் அணிந்த நிலையில் அந்த பெண்ணும் வேறொரு ஆணும் கட்டியணைக்கும் காட்சி ஒன்று ஓடுகிறது.

அந்த வீடியோவில் அந்த பெண்ணுடன் இருக்கும் ஆணும் அந்த நிகழ்ச்சியிலேயே இருக்க, அவரை கையைப் பற்றி அழைத்து வரும் அந்த கணவர், இந்த வளைகாப்பு நிகழ்ச்சி என்னுடையதல்ல இவர்கள் இருவருடையதும், நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என அங்கிருந்து மெல்ல செல்கிறார்.

அந்த பெண்ணின் ரகசிய காதலனுக்கு அடி விழ ஆரம்பிக்கிறது. அந்த கணவர் அங்கிருந்து புறப்பட, அவருக்கு துரோகம் செய்த அந்த மனைவி ஏதோ கெஞ்சியபடி அவர் பின்னே ஒடுகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad