விஸ்கான்சின் துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடந்தது அல்ல - 8 பேர் காயம், குற்றவாளியை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

விஸ்கான்சின் துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடந்தது அல்ல - 8 பேர் காயம், குற்றவாளியை தேடும் பொலிஸார்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் வாவடோசா நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நேற்று (20) மாலை புகுந்த ஒரு இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் சிதறி ஓடினர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்திய நபரின் வயது 20 முதல் 30 க்குள் இருக்கும் என நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறி உள்ளனர். அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment