மட்டக்களப்பில் 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

மட்டக்களப்பில் 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பில் 2020-2021ம் ஆண்டிற்கான பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது. இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்களில் 60 ஆயிரத்தி 87.5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதீன் தெரிவித்தார். 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற நிலையிலும், அப்பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தினைக் கட்டியெளுப்பும் செயற்றிட்டங்களை அரசும் விவசாய அமைச்சும் முன்னெடுத்து வருகின்றது. 

இதேவேளை, இம்மானிய உரங்களை கொழும்பிலிருந்து கொண்டு வருவதில் பல சவால்களை எதிர்கொள்கின்ற அதே வேளையில், விவசாயிகளுக்கான மானிய உரங்கள் கிரமமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் நிலையத்தினால் சுமார் 50 வீதத்திற்கும் அதிகான உரம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூரியா, ரீ.எஸ்.பீ மற்றும் எம்.ஓ.பீ ஆகிய உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment