பேலியகொட, மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 15,334 ஆக அதிகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

பேலியகொட, மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 15,334 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 439 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 437 பேர் பேலிகொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த இருவரும் இதில் அடங்குகின்றனர்.

பேலியகொட மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 15,334 வரை அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை தற்சமயம் பதினெட்டாயிரத்து 8,36 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுள் குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,902.

இன்றைய தினம் காலை வரையில் கொவிட் வைரசு தொற்றின் காரணமாக முதலாவது மற்றும் இரண்டாவது நிலை தொற்றுக்குள்ளான சுமார் 30,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3,812 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட்19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றய தினத்தில் மாத்திரம் 4 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் 70, 27, 59, 86 வயதுடையவர்கள். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது

நேற்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 10,356.

No comments:

Post a Comment

Post Bottom Ad