பல பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இரத்து - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பல பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இரத்து

இன்று (29) நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்திற்கான கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட கால அட்டவணை தொடர்பில் ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, ரம்புக்கனை தொடக்கம் கொழும்பு கோட்டை வரையும், பெலியத்தை, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தொடக்கம் மருதானை வரையும் அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும், சிலாபம் தொடக்கம் கொழும்பு கோட்டை வரையும் நாளை தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை எவ்வித ரயில்களும் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான ரயில்கள் உரிய நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad