அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கத் தடை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கத் தடை

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது மேல் மாகாணத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிப்பதற்கு எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு மட்டும் ஊரடங்கு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, மேல் மாகாணத்தில் நாளை (29.10.2020) நள்ளிரவு முதல், எதிர்வரும் திங்கட்கிழமை( 02.11.2020) காலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad