டுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

டுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

துபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் அதிகமானோர் வர தொடங்கியுள்ளனர். 

இதில் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடற்கரை அல்லது கடலில் நீந்தும் போது அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தண்ணீரில் இருக்கும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை. அதுவே கடற்கரை பகுதியில் உலாவும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடற்கரைக்கு செல்வோர் தாங்கள் பயன்படுத்தும் துண்டு, நிழற்குடை, குடிநீர் போத்தல் ஆகியவற்றை தனியாக ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மற்றவர்களுடன் எந்த தங்களது தனிப்பட்ட பொருட்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கடற்கரை பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் ஓய்வு அறைகளுக்கு செல்லும்போது சானிட்டைசர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்களுடன் பாக்கெட்டில் சானிட்டைசர் மற்றும் ஈரமான திசு காகிதங்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கூடுதலாக பிளாஸ்டிக் பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட முகக்கவசத்தை வைத்துக் கொள்ள வேண்டும். முகத்தை கைகளால் தொட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment