கடமைகளை பொறுப்பேற்றார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

கடமைகளை பொறுப்பேற்றார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசோல குணவர்தன இன்று (29.10.2020)) சுகாதார அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதன்போது, கொவிட்19 கொரோனா வைரஸ் விரைவில் இலங்கையில் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆதரவுடன் வெற்றி கொள்ள முடியும் என புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசோல குணவர்தன தெரிவிவத்தார். 

இருப்பினும், வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் எதிர்காலத்தில் சாதகமான முடிவுகளைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றார். வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஆதரவு மிக முக்கியமானது. 

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும் இதனால் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்,

No comments:

Post a Comment

Post Bottom Ad