ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

36 வருட சேவையை நிறைவு செய்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

2019 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் இலங்கையின் 17 ஆவது விமானப் படைத் தளபதியாகும்.

முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய அவர் தனது சேவைக் காலத்தில் வடமராட்சி நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி சேவா பதக்கம், தேசபுத்ர விருது, ரணசூர விருது (மூன்று முறை), வடக்கு கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம், உத்தம சேவா பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தாய்நாட்டுக்காக செய்த பணிகளை பாராட்டிய ஜனாதிபதி சுமங்கள டயஸின் ஓய்வுகால வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad