ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் - விஜயதாச ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் - விஜயதாச ராஜபக்ஷ

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்று வெளியாகும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பஸ்களில், புத்தளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச் சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியாணை தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்து விட்ட போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யத் தவறிவிட்டது என அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad