கம்பளை பழைய பாலத்தில் ஆணின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

கம்பளை பழைய பாலத்தில் ஆணின் சடலம் மீட்பு

ஏ5 பிரதான பாதையில் அமைந்துள்ள கம்பளை பழைய பாலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கம்பளை பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் தலையில் காயங்கள் காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

வெலிமடையைச் சேர்ந்த வீரசிங்க முதியான்சலாகே நிசாந்த லஹிரு  என்ற 37 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கம்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(தெல்தோட்டை நிருபர் - நவராஜா)

No comments:

Post a Comment

Post Bottom Ad