கலால்வரி திணைக்கள மறுசீரமைப்புக்கு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ஆலோசனை - News View

Breaking

Post Top Ad

Thursday, October 1, 2020

கலால்வரி திணைக்கள மறுசீரமைப்புக்கு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ஆலோசனை

கலால்வரி திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கலால்வரி திணைக்களத்தின் தொழிற்சங்க ஊழியர்களின் சிக்கல் தொடர்பில் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று (30) இடம்பெற்றது.

அரசியல் அச்சுறுத்தல் காரணமாக வழங்கப்படும் இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தி, தகுதிகளை பூர்த்தி செய்தவற்களுக்கு மாத்திரம் தேவையான இடமாற்றங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலாபமீட்டப்படும் இடங்களில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் இடமாற்றத்திற்கு அமைய, உரிய காலப்பகுதியில் தேவையானவர்களுக்கு காலத்தில் இடமாற்றத்தை வழங்குமாறும் பிரதமர் கலால்வரி திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad