மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற கணக்காளர் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற கணக்காளர் பலி

யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று (28) உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை, திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணக்காளரான வல்லிபுரம் ஆறுமுகசாமி (76) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர், சுன்னாகம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தமையால், நடு வீதியில் நின்றுள்ளார். அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தி படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad