கொரோனாவின் இரண்டாவது அலை - பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

கொரோனாவின் இரண்டாவது அலை - பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை காரணமாக பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள் / பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த மருத்துவ அவசரநிலை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து பிரான்சில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் பிரான்சில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. 

நாளை (ஒக்டோபர் 30 வெள்ளிக்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு டிசம்பர் 1ம் திகதி முடிவுக்கு வருகிறது. அதன் பின் ஆய்வுகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஊரடங்கு விதிமுறைகள்

மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை

பாடசாலைகள் செயல்பட அனுமதி 

வேலைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி

மருத்துவ தேவைக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை

பார்கள், உணவகங்கள், அத்தியாவசிய தேவைகள் அற்ற கடைகள் திறக்க தடை

வீடுகளில் இருந்து வேலை செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒன்லைன் மூலம் வகுப்புகளை நடந்த வேண்டும்

சர்வதேச எல்லைகள் பெரும்பாலும் மூடப்படும்

அத்தியாவசிய கடைகள் செயல்படும்

பொதுப்போக்குவரத்து செயல்படும்

தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறலாம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எல்லைகள் திறந்தே இருக்கும்

பிரான்ஸ் மக்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த நாடு திரும்பலாம்

முதியோர் இல்லங்கள் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்

No comments:

Post a Comment

Post Bottom Ad