கஹதுடுவாவில் உள்ள ஹிர்தராமணி ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 
ஒக்டோபர் 03 ஆம் திகதி மினுவாங்காடைவில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் காரணமாக இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனமை தெரியவந்துள்ளது. 
இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் இன்று பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

 
 
 
 
 
No comments:
Post a Comment