மாதாந்த சம்பளத்தில் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்த நகர சபை உறுப்பினர் டீன் பைறூஸ் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

மாதாந்த சம்பளத்தில் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வாங்கி கொடுத்த நகர சபை உறுப்பினர் டீன் பைறூஸ்

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கல்வி பயிலும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 15,000/= ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றினை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எல்.டீன் பைறூஸ் இன்று வியாழக்கிழமை கையளித்தார்.

நகர சபை உறுப்பினரான ஏ.எல்.டீன் பைறூஸ் நகர சபையினால் தனக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் 15000/= ரூபாவை ஓவ்வொரு மாதமும் உதவி வருகின்றவர். 

அந்த வகையில் இம்மாத சம்பளத்தை இந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியை வாங்கி கையளித்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad