பாணந்துறை நகர சபைத் தலைவரின் சாரதிக்கு கொரோன - மேயர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

பாணந்துறை நகர சபைத் தலைவரின் சாரதிக்கு கொரோன - மேயர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

பாணந்துறை நகர சபையின் தலைவர் நந்தன குணதிலகவின் கார் சாரதி கொவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டது பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாணந்துறை நகர சபையின் அனைத்து ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பாணந்துறை பொதுச் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலைமை காரணமாக நகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களை தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்த பாணந்துறை சுகாதார அதிகாரிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பிசிஆர் சோதனை முடிவுகள் நாளை வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

தினக்குரல்

No comments:

Post a Comment

Post Bottom Ad