அமெரிக்க ஜனாதிபதியின் பிரசார இணையத்தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

அமெரிக்க ஜனாதிபதியின் பிரசார இணையத்தளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

அமெரிக்காவில் வருகின்ற 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ட்ரம்பின் பிரசார இணையத்தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். 

தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தவிர ட்ரம்பின் பிராசார குழு தனி இணையத்தளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் ட்ரம்பின் பிரசார இணையத்தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். 

சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக அந்த இணையத்தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹேக்கர்கள் அதில் ட்ரம்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ட்ரம்பின் பிரசார இணையத்தளம் முடக்கப்பட்டது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment