ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வெளியுறவுக் கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் டலஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வெளியுறவுக் கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் டலஸ்

(இராஜதுரை ஹஷான்)

அனைத்து நாடுகளுடனும் அரசாங்கம் பொதுவான வெளியுறவுக் கொள்கையினை பின்பற்றும். ஒரு தரப்பினருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் பட்சத்தில் முரண்பாடுகளே தோற்றம் பெறும் என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் நேற்று நாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆகியோரது விஜயம் தொடர்பில் அரசியல் மேடைகளில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. 

நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியற்றுக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் வெளிவிவகார உறவினை பேணுகிறது.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வெளியுறவுக் கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளுடனும் பொதுத்தன்மையினை பேணுவது வெளிவிவகார கொள்கையின் பிரதான இலக்காக காணப்படுகிறது.

கடந்த அரசாங்கம் வெளிவிவகார கொள்கையில் முரண்பாடான தன்மைகளை கொண்டது. இதன் தாக்கம் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் ஏற்பட்டது.

வெளிவிவகார கொள்கையில் ஒருமித்த தன்மையினை பேணினால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் எந்நிலையிலும் நல்லுறவை பேணும் அரசியல் காரணிகளை கொண்டு வெளிவிவகார கொள்கை செயற்படுத்தப்படாது என்றார்.

No comments:

Post a Comment