பாராளுமன்ற அமர்வில் ஊடக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு விசேட அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

பாராளுமன்ற அமர்வில் ஊடக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வு தினங்களில் பாராளுமன்ற ஊடக Media Coverage நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வு தினங்களில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஊடக மத்திய நிலையத்திலிருந்து ஊடக Media Coverage நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவிப்பு.

மேற்குறிப்பிட்ட இரண்டுத் தினங்களில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடக மத்திய நிலையத்திற்குச் சென்று ஊடக Media Coverage நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்றும் இவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் இடங்கள் தொடர்பாக தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக உங்களது நிறுவனத்தில் இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளரர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அவர்களுக்கு இது தொடர்பாக அறிவிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad