நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலாது - ரணில் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலாது - ரணில் ஆலோசனை

(லியோ நிரோஷ தர்ஷன்)

குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்காது கொவிட்-19 வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது. மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் அரசாங்கம் இதைவிட அவதானமாக இருந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மலையகத்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிற்கு திரும்பிய நிலையில் இன்று வியாழக்கிழமை கட்சி உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தார். இதன் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பி.சி.ஆர். பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது. 

குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.

கொவிட-19 வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும். 

இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலாது. குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment