தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன - News View

Breaking

Post Top Ad

Thursday, October 8, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிலையங்கள், சதொச, உள்ளிட்ட அனைத்து பல்பொருள் அங்காடிகள், அனைத்து மருந்தகங்கள், விலங்கு உற்பத்திகள் மற்றும் விநியோக நிலையங்கள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள், உணவு மற்றும் பான வகைகளை உற்பத்தி செய்யும் அரச மற்றும் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களை (Semi Government) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (09) முற்பகல் 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை குறித்த அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வர்த்தக நிலையங்களை திறக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கைக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிதல்
சமூக இடைவெளியைப் பேணுதல்

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் முகாமைத்துவத்தினருக்கான அறிவுறுத்தல்கள்

தமது நிறுவனத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல்.

கொவிட்-19 தொற்றுக்குரிய அறிகுறிகள் கொண்டோரை நிறுவனத்திற்குள் அனுமதிக்காதிருத்தல் மற்றும் அவர்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்தல்.

நிறுவனத்திற்கு வரும் அனைவரும் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்திருத்தல்.

சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுதல்.

அத்துடன், திறப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள சேவை நிலையங்களிலுள்ள ஊழியர்கள், உரிய நிறுவனத்திற்கு வருதல் மற்றும் வெளியேறுதல் அத்துடன் பொருட்களின் போக்குவரத்தின் போது, அவர்களது ஆளடையாளங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதி வழங்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்பவர்கள் வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும், நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் மற்றும் வயதானவர்கள் முடிந்தவரை வீடுகளிலிருந்து இருக்குமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், தங்களது வீடுகளுக்கு மிக அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று தங்களுக்கு அவசியமான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தல், வீட்டை விட்டு வெளியேறும்போது சரியான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்கள்
கம்பஹா
கணேமுல்ல
கிரிந்திவெல
தொம்பே
மல்வத்துகிரிபிட்டிய
மீரிகம
நிட்டம்புவ
பூகொட
வியாங்கொடை
மினுவாங்கொடை
வீரகுல
வெலிவேரியா
பல்லேவெல
யக்கல
ஜா-எல
கந்தானை
திவுலபிட்டி
சீதுவை

No comments:

Post a Comment

Post Bottom Ad