சீனாவின் அறிக்கை பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

Breaking

Post Top Ad

Friday, October 9, 2020

சீனாவின் அறிக்கை பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

கொவிட்-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கைக்கு இரண்டாம் இடமென குறிப்பிட்டுள்ள சீன அரசாங்கத்தின் கணிப்பு பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். 

கொவிட்-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்த நாடுகளில் சீனா முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் இருப்பதாக சீனாவின் அரச நிறுவனமான "வை.ஐ.சி.எ.ஐ" நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதியளவில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. 

அதேபோல் சீன தூதரக அதிகாரிகள் குழுவும் தற்போது நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், பாராளுமன்றத்தில், சிறப்பு கூற்றொன்றை பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்தார்.

அவர் கூறுகையில், சீன அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை முற்று முழுதாக பொய்யாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும், சீன அரசாங்கத்தின் அறிக்கையை நம்ப வேண்டாம் எனவும் சபையில் வாதிட்டார். 

இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளதாகவும், அரசாங்கத்தின் இந்த மோசடியே இலங்கையில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவ காரணமாக அமைந்து விட்டதாகவும் சபையில் ஆளும் தரப்பை குற்றம் சுமத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad