கொழும்பு மாநகர சபையின் சேவைகள் குறித்து அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

கொழும்பு மாநகர சபையின் சேவைகள் குறித்து அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக கையளிக்கப்பட வேண்டிய அனைத்து விண்ணப்பங்களும் கொழும்பு மாநாகர சபையின் பிரதான கட்டடத்துக்கு அருகாமையில் உள்ள சப்பிரி பியஷ கரும பீடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடேச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மாநகர சபை சேவைகளுக்காக பிரதான அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த சேவை தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறும். மதிப்பீட்டு வரியை கொழும்பு நகரத்தின் வங்கிக்கிளை ஒன்றின் ஊடாக மேற்கொள்ள முடியும். வரி மற்றும் வாடகை ஆகியவற்றை இணைய வழி ஊடாக மேற்கொள்ள முடியும்.

இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் பொழுது ஏதேனும் பிச்சினைகள் எதிர்நோக்கப்படுமாயின் 011 567636 / 077399825 / 0718234717 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என்று கொழும்பு மாநாகர சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad