திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா - 13 வைத்தியர்கள் உட்பட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா - 13 வைத்தியர்கள் உட்பட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கே இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வைத்தியசாலையின் 13 வைத்தியர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 15ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால், இவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வைத்தியசாலையில் இரண்டு நோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment