ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 189 பேர் டெங்கினால் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 189 பேர் டெங்கினால் பாதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாகக் காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரவில் கடந்த ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை 189 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் மாதம் மாத்திரம் 14 நான்கு பேரும், அதில் கடந்த வாரம் மாத்திரம் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதில் பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், நேற்று புதன்கிழமை ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன், வீடுகள் மற்றும் பாடசாலை என்பன பரிசோதிக்கப்பட்டு, பொது மக்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வுக்கு ஓட்டாமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச விளையாட்டுக் கழகங்கள் என்பன பங்களிப்பினை வழங்கியிருந்தன.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச செயலக, பிரதேச சபை ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment