மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளளன. வழமையான உள்ளக இடமாற்றமாக இது அமைந்துள்ளது.

அதன்படி ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரியாக இதுவரை கடமையாற்றிய வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய வைத்தியர் அப்துல் மஜீத் ஷ‪hபிறா வஸீம் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad