பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார் - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos
பிக்பாஸ் தமிழ் முதலாவது தொடரின் வெற்றியாளராக தெரிவான ஆரவ் திருமண பந்தத்தின் இணைந்துள்ளார்.

இந்திய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக தெரிவானவரே ஆரவ்.

கடந்த சில நாட்களாக அவருக்கு திருமணமாகப் போகின்றது எனவும் நடிகை ராஹே என்பவரை அவர் மணம் முடிக்கவுள்ளதாகவும் இந்திய இணையத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

நடிகை ராஹே, கௌதம் மேனன் இயக்கிய 'ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹே ஆகியோரின் திருமணம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 

இத்திருமணத்திற்கு பிக்பாஸ் தமிழ் முதல் தொடரின் போட்டியாளர்களான கவிஞர் சிநேகன், நடிகைகளான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, சுஜா வருணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இருவரும் காதலித்தார்கள் எனவும், இத்திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடனே நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிக்பாஸ் தொடரின்போது, ஆரவ்வை காதலித்ததாக சர்ச்சைக்குள்ளான நடிகை ஓவியா இத்திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad