திங்கட்கிழமை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து நல்ல செய்தி வரும் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

திங்கட்கிழமை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து நல்ல செய்தி வரும்

திங்கட் கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.... எஸ்.பி.பி. உடல் நலம்  குறித்து எஸ்.பி.பி.சரண் - Thennagacheithi
வரும் திங்கட்கிழமை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்று அவரது மகன் கூறியிருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும், மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணர்ந்து பதிலளிக்கிறார். பிசியோதொரபி சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார் என்று அண்மையில் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை 4-வது நாளாக சீராக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள். உங்களுடைய ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad