இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

Silvio Berlusconi: Former Italy PM tests positive for coronavirus - Isle of  Wight Radio
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி 83 வயதான இவர் பெரும் வர்த்தகர். கோடீசுவரரான இவர் அரசியலில் புகுந்து வெற்றி பெற்றார்.

இதன்மூலம் கடந்த 1994ம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக பெர்லஸ் கோனி செயல்பட்டுள்ளார்.

இவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக் கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார்.

இந்நிலையில், பெர்லஸ் கோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மிலன் நகரின் அர்கோர் பகுதியில் உள்ள தனது வீட்டில் பெர்லஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்த்திக் கொண்டுள்ளார். 

பெர்லஸ் சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்ததாகவும், அங்குதான் அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனவும் அவரது மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனி விரைவில் குணமடைய பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad