புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் - கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் - கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியவில்லை என்று  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் ...
(நா.தனுஜா) 

நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்கு பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியிருக்கிறார். 

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் வைத்து இன்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறார். 

இதன்போதே போராயர் இதனை தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்ளிடம் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி நடைபெற்றுவரும் விசாரணைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக கார்டினல் சந்திப்பில் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad