பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்தால் ஆஸியில் கொரோனா தடுப்பு மருந்து இலவசம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்தால் ஆஸியில் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான இரு தடுப்பு மருந்துகளின் சோதனை வெற்றியளித்தால் 85 மில்லியன் மருந்துகளை பெறவிருப்பதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்தால் 2021 இல் அதனை இலவசமாக வழங்குவதற்கு இரு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதன் மதிப்பு 1.24 பில்லியன் டொலர்கள் என்று மொரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் ஜனவரி மாதத்தில் இந்த தடுப்பு மருந்துகளைப் பெறுவர். ஆனால் அதற்கான உறுதி அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

“இருப்பினும் நமது மருத்துவ நிபுணர்கள் அந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கினால் அவுஸ்திரேலியா முதல் இடத்தில் இருக்கும்” என மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு மருந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனகா மருந்தக நிறுவனங்களினால் சோதிக்கப்பட்டு வருவதோடு மற்றையது உள்நாட்டில் கவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தால் சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு மருந்துகளும் ஒருவர் இரு முறை பயன்படுத்தும் வகையில் அமையும்.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 26,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 769 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad