ஒரு குடும்பத்தின் தேவைக்காக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுவது இந்நாட்டில் மாத்திரம்தான் - காவிந்த ஜயவர்தன எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

ஒரு குடும்பத்தின் தேவைக்காக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுவது இந்நாட்டில் மாத்திரம்தான் - காவிந்த ஜயவர்தன எம்.பி.

மகப்பேற்று வைத்தியரிடம் மன்னிப்புகோர தயார்: காவிந்த ஜயவர்தன - Tamilwin
(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது. தனி குடும்பம் பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்கவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்படவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கியுள்ளமை எதிர்காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வீழ்ச்சிடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைக் கொணடுள்ளது . அதன் பின்னணியின் ஊடாகவே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுகிறது. 

நாட்டு மக்கள் பயன் பெறும் விடயங்கள் 20 இல் குறிப்பிடப்படவில்லை. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை ஒரு குடும்பம் ஆக்கிரமிக்கும் ஏற்பாடுகள் மாத்திரம் மறைமுகமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

19 இல் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டன. 2014 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தின் நிலைமை இரண்டாம் சுற்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அரசாங்கத்துக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கிய மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தின் தேவைக்காக நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுவது இந்நாட்டில் மாத்திரம் இடம்பெறுகிறது.

20 இல் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் முழுமையாக பகிரங்கப்படுத்தாது. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதற்காகவே இரட்டை குடியுரிமை விவகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில அரச நிர்வாகங்களில் இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படமாடடர்கள்.

சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்துள்ளமை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment