இந்திய பிரதமர் மோடிக்கு அறிவித்தும் தொடரும் நிலை - கட்டுப்படுத்த எமது கடற்படையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 29, 2020

இந்திய பிரதமர் மோடிக்கு அறிவித்தும் தொடரும் நிலை - கட்டுப்படுத்த எமது கடற்படையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம். எனினும் தொடர்ந்தும் நடைபெறும் அத்துமீறல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு என்ற வகையில் அதற்கான பணிப்புரைகளை கடற்படைக்கு வழங்கியிருக்கிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

ஊடக நிறுவன தலைவர்களுடன் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பான பிரச்சினைக்கான தீர்வென்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் விளக்கமளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமரிடம் கூறிய போது அவர் இதற்கு தெளிவான பதிலொன்றை வழங்கவில்லை. இருப்பினும் தமிழக முதலமைச்சருடன் பேசி இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறும் நாம் அவரிடம் கேட்டுக்கொண்டோம். 

இந்தியப் பிரதமருடனான பேச்சின் பின்னரும் நேற்றும் இந்திய மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்படிப்பில் ஈடுபட்டனர். எமது மீனவர்களின் வலைகள் அறுத்து வீசப்பட்டுள்ளன. தாக்கப்படுகின்றனர். கடற்றொழிலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். 

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நகர்வு முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

கே. அசோக்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad