நீதி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் விசேட குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

நீதி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் விசேட குழு நியமனம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

போதைப் பொருளுடன் தொடர்புபட்டு சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அது தொடர்பில் எடுக்க முடியுமான தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நீதி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

நீதி அமைச்சின் சட்ட ஆலோசகர்கள் இந்த குழுவின் ஆலாசகர்களாக செயற்படுபவர்.

போதைப் பொருளுடன் தொடர்புபட்டு சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அது தொடர்பில் எடுக்க இருக்கும் தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களுடன் சம்பந்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விளக்குமறியல் கைதிகளின் எண்ணிக்கை தற்போது பாரியளவில் அதிகரித்திப்பதால், நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டு அவர்களை புனவர்வாழ்வளிப்பது தொடர்பாக இந்த சந்திப்பின்போது பிரதானமாக கலந்துந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment