வாக்குறுதியை மீறியதாக சஜித் மீது அஸாத் சாலி மீண்டும் குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

வாக்குறுதியை மீறியதாக சஜித் மீது அஸாத் சாலி மீண்டும் குற்றச்சாட்டு

வாக்குறுதியை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அழைப்பாணையொன்றை அனுப்ப தேசிய ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.

கொழும்பு, நாவலயிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, தன்னை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதாக சஜித் பிரேமதாச கூறியிருந்த போதிலும் அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடவோ, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு செல்லவோ நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. 

எனினும் “நான் சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாசவின் மகன், கட்டாயம் உங்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது எனது பொறுப்பு” என சஜித் பிரேமதாச என்னிடம் வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதியை மீறியமைக்காவே இந்த அழைப்பாணையை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.

நினைத்து பார்க்காத விதத்தில் இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். எனினும் அந்தக் கட்சி தனது தேசிய பட்டியலில் முஸ்லிம்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவில்லையெனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad