விபத்தில் வேறான கையை இணைக்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, September 6, 2020

விபத்தில் வேறான கையை இணைக்க பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்

விபத்தில் வேறான கையை பிணைக்க சத்திரசிகிச்சை-Accident-Goadakawela Wrist Separated-Surgery
பஸ் விபத்தில் மணிக்கட்டுடன் வேறாகிய இளைஞனின் கையின் பகுதியைப் இணைக்க இரத்தினபுரி அரச வைத்திசாலை வைத்தியர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருவதாக இரத்தினபுரி அரச வைத்தியசாலை சத்திரசி கிச்சைப் பிரிவின் வைத்தியர்கள் நேற்று தெரிவித்தனர்.

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய வீதியில் கொடகவெல கலஹிட்டய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு - பதுளை வீதியில் மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் இரத்தினபுரிபுரியிலிருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் வண்டியும் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இவ்விபத்தின் போது இ.போ.ச பஸ் வண்டி, தனியார் பஸ் வண்டி மீது மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் வண்டியின் பின் ஆசனத்தின் வலது பக்க மூலை ஜன்னலில் கையை வைத்தவாறு குறித்த இளைஞன் பயணித்துள்ளதாகவும் இ.போ.ச. பஸ் வண்டி தனியார் பஸ் மீது மோதியதால் யன்னலில் தனது கையை வைத்திருந்த இளைஞனின் கை பாதிப்புக்குள்ளாகி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கையை இழந்தவர் கொடக்கவெல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் எனவும் கஹவத்தைப் பொலிசார் இ.போ.ச. பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

No comments:

Post a Comment

Post Bottom Ad