ஊவா மாகாண ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஏ.ஜே.எம்.முஸம்மில் - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

ஊவா மாகாண ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஏ.ஜே.எம்.முஸம்மில்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார் | Athavan News
ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் அவர் இன்று (திங்கட்கிழமை) காலை மத வழிபாடுகளின் பின்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர், கொழும்பு மாநகர சபையின் மேயராகவும் செயற்பட்டு வந்ததுடன், சிறிது காலம் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் சேவையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார் | Athavan News

No comments:

Post a Comment

Post Bottom Ad