யாழில் ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த ஐவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

யாழில் ஹெரோயின் நுகர்ந்து கொண்டிருந்த ஐவர் கைது

ஹெரோயின் போதை நுகர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது - www.pathivu.com
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படவர்களிடமிருந்து 210 மில்லிக் கிராம் கொரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad