பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இரு வாரங்களுக்குள் வௌியிடப்படும் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இரு வாரங்களுக்குள் வௌியிடப்படும்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கான 36 தேர்வுகளின் பெறுபேறுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 10,000 மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ, பொறியியலாளர் உள்ளிட்ட பீடங்கள் சிலவற்றிற்கு உள்ளீர்க்கப்படும் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad