மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா - இலங்கைக்கிடையே பேச்சு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா - இலங்கைக்கிடையே பேச்சு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது மின் சக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது இலங்கையில் எரிசக்தி துறைக்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நோக்கங்கள் குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தேசிய மின் உற்பத்திக்கான பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களின் பயன்பாட்டை 70 சதவீதமாக ஆக உயர்த்தவும், டீசலின் பங்களிப்பை 5 சதவீதமாக குறைக்கவும் அரசாங்கம் விரும்புவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இதற்கு பதிலளித்த தூதுவர் டெப்லிட்ஸ், இலங்கையில் எரிசக்தி துறையின் முன்னேற்றத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களை நிறுவ முதலீட்டாளர்களை வழிநடத்தவும் அமெரிக்கா தயாராக உள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment