பாராளுமன்ற உணவகத்தில் சேவையாற்றியவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

பாராளுமன்ற உணவகத்தில் சேவையாற்றியவருக்கு விளக்கமறியல்

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உணவகத்தின் விநியோகப் பிரிவில் சேவையாற்றிய உத்தியோகத்தர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் H.I.K.காஜிங்கல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை அன்றையதினம் மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உணவகத்திற்கு பழங்கள் விநியோகிப்பவர் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment