மழையுடன் டெங்கு தலை தூக்கும் அபாயம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

மழையுடன் டெங்கு தலை தூக்கும் அபாயம்

Dengue virus ravages impoverished Laos - UCA News
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு மீண்டும் தலை தூக்கும் அபாயம் காணப்படுவதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காரணமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு, இக்காலப்பகுதியினுள் 26,238 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, தங்களது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad