மாடு அறுப்பு தடை தொடர்பில் மறுபரீசிலனை செய்ய வேண்டு, பெரும்பாலும் பேரினவாத சபைகளே பாதிக்கப்படும் - நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

மாடு அறுப்பு தடை தொடர்பில் மறுபரீசிலனை செய்ய வேண்டு, பெரும்பாலும் பேரினவாத சபைகளே பாதிக்கப்படும் - நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர்

பாறுக் ஷிஹான்

மாடுகளை அறுப்பது தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபைக்கூட்டமும் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான 4வதும் பிரதேச சபையின் 30வது சபை அமர்வும் இன்று புதன்கிழமை (30) நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர், 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உரை என்பன இடம்பெற்றன. தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும், சபையின் எல்லைக்குட்பட்ட மக்களின் அடிப்படை நலன்சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 

இது தவிர, உப தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வையின் முன்மொழிவுகளாக வடிகான் துப்பரவு செய்தல், வைத்தியசாலை வீதியின் குறைபாடுகள், வாகனங்கள் மேற்பார்வை கடமை தொடர்பாக ஆராய்தல் தொடர்பிலான முன்மொழிவுடன் உறுப்பினர்களான கே.எம்.ஜெசிமா முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சபை நிறைவுக் கட்டத்தில் விசேடமாக தவிசாளர் தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அக்கறை செலுத்தப்பட வேண்டுமெனக் கூறியதுடன், அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். 

அத்துடன், இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பாக கூறிய அவர், பல பிரதேச சபைகளின் வருமானம் இறைச்சிக்கடைகளினால் தான் இயங்குவதாகவும், பெரும்பாலும் பேரினவாத சபைகளே பாதிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்விடயம் தொடர்பாக தெளிவாகப் பதிலளிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment