மற்றுமொரு பாதாள குழு உறுப்பினர் ஹெரோயினுடன் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

மற்றுமொரு பாதாள குழு உறுப்பினர் ஹெரோயினுடன் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் 2.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய இச்சந்தேகநபர், 21 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான ‘இரத்மலானை அஞ்சு’ எனும் போதைப்பொருள் வர்த்தகரின் சகா எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad