சீமெந்து கலக்கும் கனரக வாகனத்துடன் மோதிய வேன் - News View

Breaking

Post Top Ad

Sunday, September 6, 2020

சீமெந்து கலக்கும் கனரக வாகனத்துடன் மோதிய வேன்

சீமெந்து கலக்கும் கனரக வாகனத்துடன் மோதிய வேன்-Accident-Trincomalee-Kandy Road
கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 97ஆம் கட்டை புளிக்குட்டி சந்தியில் சீமெந்து கலக்கும் கனரக வாகனத்துடன் வேன் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று (05) மாலை இடம் பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்தின் பின்னால் வந்த வேன், அவ்வாகனத்தின் மீது மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், இதில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad