கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ராட்சத ரப்பர் உருளை - தமிழக கடலோர காவல் குழுமம் தீவிர விசாரணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ராட்சத ரப்பர் உருளை - தமிழக கடலோர காவல் குழுமம் தீவிர விசாரணை

தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல்குழும பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கை நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே ராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோரா காவல் குழும பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்குச் சென்ற மெரைன் பொலிஸார் சோதனை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட உருளையை கரைக்கு கொண்டு வர முயறச்சித்தனர் காற்றின் வேகம் அதிகரித்ததால் அதனை ஒத்தப்பட்டி கடலற்கரை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

சுமார் 15 அடி உயரமும் 6 அடி விட்டமும் கொன்ட ரப்பர் உருளை சுமார் 3 டன் எடை கொன்டதாக இருக்கும் என ராமேஸ்வரம் தமிழன கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய பைபர் உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மித வையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த வகையான ரப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை என்பதால் இலங்கை துறைமுகத்திற்க்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோனத்திலும் மெரைன் பொலிசாருடன் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராட்சத ரப்பர் உருளை சிக்கியது தனுஸ்கோடி கடலோர கிராமங்களில் கடலோரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment