யாழ். கொழும்புத்துறையில் 5 கடலாமைகளுடன் ஒருவர் கைது! - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 29, 2020

யாழ். கொழும்புத்துறையில் 5 கடலாமைகளுடன் ஒருவர் கைது!

தடை செய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். 

இதன்போது வீட்டுக்குள் இருந்து ஐந்து கடலாமைகளை விசேட அதிரடிப் படையினர் உயிருடன் மீட்டுள்ளதுடன் 36 வயதுடைய வீட்டு உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கடலாமைகள் மற்றும் கைது செய்யப்பட்டவரை நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள கடல் ஆமைகள் யாழ்ப்பாண குடாநாட்டில் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad